cheranga-uom
data added into the repo
fb7bce2
{"Header": "புதிய முல்லைத்தீவு தளபதிக்கு 59 ஆவது படைப் பிரிவினால் மரியாதை நிகழ்வு", "Time": "19th September 2019 14:20:01 Hours", "Content": "முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் புதிய படைத் தளபதியான மேஜர் ஜெனரல் H.J செனெவிரத்ன அவர்களுக்கு 59 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் இம் மாதம் (18) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன. 59 ஆவது படைப் பிரிவிற்கு வருகை தந்த முல்லைத்தீவு தளபதியை இப் படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் K. H. P. P பெர்ணாண்டோ அவர்கள் வரவேற்றார். பின்னர் 24 ஆவது சிங்கப் படையணியினால் இராணுவ மரியாதைகள் வழங்கி வரவேற்கப்பட்டார். தளபதியவர்கள் அவரது வருகையை நினைவு படுத்தும் முகமாக 59 ஆவது படைப் பிரிவு தலைமையக வளாகத்தினுள் மரநடுகை மேற்கொள்ளப்பட்டு பின் படையினர் மத்தியில் உரையையும் நிகழ்த்தினார். இறுதியில் படைப் பிரிவின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்துபசார நிகழ்வில் கலந்து சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்."}