cheranga-uom
data added into the repo
fb7bce2
{"Header": "பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரினால்புதிய இராணுவ தளபதிக்கு வாழ்த்து தெரிவிப்பு", "Time": "03rd September 2019 13:04:30 Hours", "Content": "புதிய இராணுவ தளபதியாக லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா பதவியேற்றதன் பின்னர் உத்தியோகபூர்வமாககௌரவ பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் திரு ருவான் விஜேவர்தன அவர்களை இன்று காலை (3) பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் வைத்து சந்தித்தார். இச்சந்திப்பின்போது அமைச்சர் விஜேவர்தன அவர்கள்புதிய இராணுவ தளபதிக்கு தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்ததோடு தளபதியின் கடமைகளை சிறப்பாக கொண்டுசெல்ல தான் ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதியளித்தார். மேலும் இந்த சந்திப்பின் பின்னர் இராணுவத் தளபதி கௌரவ அமைச்சருக்கான நினைவுச்சின்னத்தினை நல்லிணக்க அடிப்படையில் வழங்கி வைத்தார்."}