cheranga-uom
data added into the repo
fb7bce2
{"Header": "குண்டசாலை மற்றும் தம்புல்ல இராணுவ வேளாண்மை பண்ணைகளுக்கு விருது ", "Time": "08th December 2018 08:44:19 Hours", "Content": "வேளாண்மை திணைக்களத்தினரால் ஒழுங்கமைக்கப்பட்ட ‘நகரயட உயன்வது’ (Farmyards to Towns) எனும் தொனிப்பொருளின் கீழ் வேளாண்மை போட்டிக்காக 1520 க்கும் அதிகமான போட்டியாளர்கள் போட்டியிட்டதில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 11 ஆவது படைப் பிரிவு மற்றும் இணாமலுவ பிரதேசத்தில் அமைந்திருக்கும் 53 ஆவது படைப் பிரிவில் பணியில் இருக்கும் படையினர்கள் முதலாவது மற்றும் மூன்றாவது இடத்தை பெற்றுக் கொண்டனர். இத்திட்டமானது 2007 ஆம் ஆண்டில் கரிம வேளாண்மை ஊக்குவிப்பதற்கான நோக்கத்துடன் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. அதற்கமைய இராணுவத்தினருக்கு விவசாய தொழிற்சாலைகள், கரிம தொழில்நுட்பம் மற்றும் உரங்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் கரிம வேளாண்மையில் பங்கேற்க இராணுவத்தினரை ஊக்கப்படுத்தின. அதற்கமைய குண்டசாலையில் அமைந்துள்ள 11ஆவது படைப் பிரிவின் பண்ணை இந்த ஆண்டு கண்டி மாவட்டத்தில் முதலாவதாக இடம் பெற்றதுடன் மாத்தளை மாவட்டத்தில் தம்புல்ல பிதேசத்தில் அமைந்துள்ள 53 ஆவது படைப் பிரிவு பண்ணை மூன்றாவது இடத்தைப் பெற்றுக் கொண்டனர். அதன்படி அரசு நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள், பாடசாலைகள், நட்சத்திர ஹோட்டல்கள், விடுதிகள் மற்றும் பல நிறுவனங்கள் உட்பட 1520 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் இந்த ஆண்டு பங்கு பெற்றன. வேளாண்மைத் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு வெற்றிக் கிண்ணமும் சான்றிதல் வழங்கும் நிகழ்வானது கொன்னேருவ தாவரங்கள் மற்றும் மரபணு வள திணைக்களத்தினரால் கடந்த (04) ஆம் திகதி இடம் பெற்றது. இந் நிகழ்வில் 11ஆவது மற்றும் 53 ஆவது படைப் பிரிவுகளின் இராணுவ கட்டளை தளபதிகளும் கலந்து கொண்டனர்."}