{"Header": "வரவு மற்றும் நிதிமேலாண்மை பணிப்பகத்தின் புதிய தளபதியவர்கள் கடமைப் பொறுப்பேற்பு", "Time": "05th November 2019 06:05:19 Hours", "Content": "இலங்கை பொது சேவைப் படையணியைச் சேர்;ந்த கேர்ணல் டி சி மெத்தநாயக்க அவர்கள் களனியில் உள்ள தலுகம பிரதேசத்தில் அமைந்துள்ள இராணுவ வரவு மற்றும் நிதிமேலாண்மை பணிப்பகத்தின் புதிய தளபதியாக கடந்த வியாழக் கிழமை (31) கடமைப் பொறுப்பேற்றார். அதற்கமைய இப் புதிய தளபதியவர்கள் மத அனுஷ்டானங்களுக்கு அமைவாக உத்தியோகபூர்வ கையொப்பமிட்டு தமது கடமைப் பொறுப்பை ஏற்றார். இந் நிகழ்வில் பணிப்பாளர் அதிகாரிகள் மற்றும் படையினர் போன்றோர் கலந்து கொண்டனர்."} |