{"Header": ["\n55 வருடங்களின் பின்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ள அமெரிக்கா, கியூபாவிற்கு இடையிலான விமான சேவை"], "Time": ["\n01 Sep, 2016\t", "| 12:35 pm ", "\n"], "Url": "https://www.newsfirst.lk/tamil/2016/09/01/55-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b0%e0%ae%ae/", "Content": "அமெரிக்காவிற்கும் கியூபாவிற்கும் இடையிலான விமான சேவை 55 வருடங்களின் பின்னர் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அமெரிக்கா விமானம் கியூபாவின் சாண்டா கிளாராவில் முதன் முதலாக தரையிறங்கியுள்ளது. இருநாடுகளிற்கும் இடையிலான உறவினை மேம்படுத்தும் நோக்கில் அமெரிக்காவின் புளோரிடாவிலிருந்து 5 மணி நேர விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விமான சேவையின் மூலம் அமெரிக்கா மற்றும் கியூபாவிற்கு இடையில் பயணிப்போரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என கருதப்படுகின்றது. அதிகாரபூர்வமாக, அமெரிக்க பிரஜைகள் கியூபா சுற்றுலாப் பயணியாக விஜயம் செய்ய முடியாது என்றபோதிலும் விஞ்ஞானம் மற்றும் கலைத்துறை வேலைகளுக்காக பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்கா மற்றும் கியூபாவிற்கிடையிலான விமான சேவை 1961 ஆம் ஆண்டு இறுதியாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது."} |