cheranga-uom
added newsfirst data
ae26518
{"Header": ["\nதென்னாபிரிக்க ஜனாதிபதி இலங்கை வருகை"], "Time": ["\n02 Sep, 2016\t", "| 11:12 am ", "\n"], "Url": "https://www.newsfirst.lk/tamil/2016/09/02/%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%87/", "Content": "தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஸூமா இன்று (02) அதிகாலை நாட்டிற்கு வருகைத் தந்துள்ளார். சீனாவிற்கான விஜயத்தின் ஒரு கட்டமாகவே தென்னாபிரிக்க ஜனாதிபதி இலங்கையை வந்தடைந்துள்ளார். எரிபொருள் நிரப்புவதற்காக, தென்னாபிரிக்க ஜனாதிபதியை ஏற்றிய விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய கடமைநேர முகாமையாளர் குறிப்பிட்டார். இலங்கை நேரப்படி அதிகாலை 1.30 அளவில் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட விமானம், இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் புறப்பட்டுச் சென்றுள்ளது. இந்த காலப்பகுதியில் தென்னாபிரிக்க ஜனாதிபதி விமான நிலையத்திலுள்ள மிக முக்கிய பிரமுகர்களுக்கான பகுதியில் தங்கியிருந்ததாகவும் விமான நிலைய தகவல்கள் தெரிவித்துள்ளன."}