{"Header": ["\nஎண்ணெய் கிணறுகளில் எண்ணெய்ப் படலத்தை பெறுவதற்கு விலைமனு கோரத் திட்டம்"], "Time": ["\n02 Jun, 2015\t", "| 9:07 am ", "\n"], "Url": "https://www.newsfirst.lk/tamil/2015/06/02/%e0%ae%8e%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%86%e0%ae%af%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a3%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%86/", "Content": "நாட்டில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இரண்டு எண்ணெய் கிணறுகளில் எண்ணெய் படலத்தை பெற்றுக்கொள்வதற்கு விலைமனு கோருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 02 மாதங்களுக்குள் விலைமனு கோருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் பீ.எம்.எஸ் படகொட தெரிவித்தார். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து விலைமனு கோரவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள எண்ணெய் கிணறுகளில் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பீ.எம்.எஸ் படகொட மேலும் கூறினார்."} |