{"Header": "66 ஆவது படைப் பிரிவினரால் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் ", "Time": "03rd June 2018 19:17:37 Hours", "Content": "661 ஆவது காலாட் படைப் பிரிவினரால் கௌதராமுனை பிரதேசத்தின் விநாயசியயோதி பிரதேசத்தின் வருமாணம் குறைந்த குடும்பத்தில் வாழும் 121 மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள கடந்த (31) ஆம் திகதி வியாழக்கிழமை வழங்கினர். இந்த நன்கொடை 66 ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 661 ஆவது காலாட் படைப் தளபதியவர்களின் மேற்பார்வையின் கீழ் மஹரகம சிரிவந்தன தேரர் அவர்களின் ஆதரவுடன் மேற்படி குறைந்த வருமானத்தில் வாழும் மாணவர்களை தெரிவு செய்ததன் பின்னர இந்த பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்த நன்கொடையில் புத்தகங்கள், பென்சில்கள், பாடசலை பைகள் மற்றும் உபகரணங்கள், வரைதல் புத்தகங்கள் அடங்கும். இந் நிகழ்விழ் 66 ஆவது படைப் பிரிவின் படையினர்களும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்."}