{"Header": ["\nபாசிக்குடா கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு"], "Time": ["\n04 Jun, 2015\t", "| 6:49 am ", "\n"], "Url": "https://www.newsfirst.lk/tamil/2015/06/04/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf/", "Content": "பாசிக்குடா கடலில் குளிக்கச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (03) பிற்பகல் 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கலேவெல பகுதியில் இருந்து 33 பேருடன் சுற்றுலாவில் ஈடுபட்டிருந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சுற்றுலாக் குழுவினர் பாசிக்குடா கடலில் குளித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் குறிப்பிட்ட இளைஞன் நீரில் மூழ்கியுள்ளார். 23 வயதான இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது. உயிரிழந்தவரின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது."}