{"Header": ["\nஹொலிவுட் நடிகர் போல் வோக்கர் காலமானார்"], "Time": ["\n01 Dec, 2013\t", "| 4:46 pm ", "\n"], "Url": "https://www.newsfirst.lk/tamil/2013/12/01/%e0%ae%b9%e0%af%8a%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%8b%e0%ae%95/", "Content": "பிரபல ஹொலிவுட் நடிகர் போல் வோக்கர்,  வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார். அமெரிக்காவின் லொஸ்ஞ்சலஸ் நகரின் வடக்கே ஒரு கார் விபத்தில் விபத்துக்குள்ளானதில் இவர் உயிரிழந்துள்ளதாக சரவதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டவிரோதமான வகையில் நடைபெறும் கார் பந்தயங்கள் பற்றிய தொடர்ச்சிப் படங்களான, ” பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் (Fast and Furious) படங்களில் அவர் நடித்த பாத்திரங்களுக்காக அவர் புகழ் பெற்றிருந்தார். இந்நிலையில் அவர் பயணித்த கார்,  தெரு விளக்குக் கம்பத்தின் மீது மோதி, பின்னர் மரமொன்றின் மீதும் மோதி வெடித்துத் தீப்பிடித்ததில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. இந்த “பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ்” தொடரின் ஏழாவது பகுதிப் படத்தில் அவர் தற்போது நடித்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது."}