{"Header": ["\nவெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜெனீவா விஜயம்"], "Time": ["\n01 Mar, 2015\t", "| 8:32 am ", "\n"], "Url": "https://www.newsfirst.lk/tamil/2015/03/01/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%99%e0%af%8d-2/", "Content": "வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா நகருக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இலங்கை நேரப்படி நேற்றிரவு புறப்பட்டுச் சென்ற அமைச்சர் ஜெனீவா நகரை சென்றடைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செய்த் அல் ஹூசைனை, அமைச்சர் மங்கள சமரவீர நாளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இந்த சந்திப்பின்போது, இலங்கையில் மனித உரிமைகளின் நிலை மற்றும் புதிய அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்ட பின்னர், நல்லிணக்க செயற்பாடுகளை பலப்படுத்துவதற்காக மேற்கொண்ட திட்டங்கள் தொடர்பில், ஐநா மனித உரிமைகள் ஆணையாளருக்கு வெளிவிவகார அமைச்சர் தெளிவுபடுத்தவுள்ளார்."}