File size: 2,481 Bytes
a13a3d2 |
1 2 3 4 5 6 |
ta_104642_0 முற்போக்கு சோஷலிச கட்சியின் அரசியல் குழுவின் உறுப்பினர் குமார் குணரத்தினத்திற்கு இந்த நாட்டின் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ta_104642_1 இந்த விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் இவருக்கு குடியுரிமையினை வழங்க தவறும் பட்சத்தில் மீண்டும் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக முற்போக்கு சோஷலிச கட்சியின் பிரசார செயலாளர் புகுது ஜயகொட தெரிவித்துள்ளார்.
ta_104642_2 குடியுரிமை தொடர்பான விண்ணப்பம், குறிப்பிட்ட அமைச்சரின் கவனத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு இதுவரை எந்தவிதமான பதிலும் கிடைக்கப்பெறவில்லை எனவும் குறிப்பிட்டார்.
ta_104642_3 இது தொடர்பில் எமது செய்திப் பிரிவு பொதுமக்கள் சமாதான தொடர்பான அமைச்சர் ஜோன் அமரதுங்கவிடம் வினவியது.
ta_104642_4 அவ்வாறான விண்ணப்பம் எதுவும் தமக்கு இதுவரை கிடைக்கவில்லை என தெரிவித்தார். உரிய முறைமைக்கு அமைய அந்த விண்ணப்பம் தமக்கு கிடைக்கப்பெறும் பட்சத்தில் அரசியல் வேறுபாடுகள் இன்றி அது குறித்து கவனம் செலுத்தப்படும் என அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.
|