cheranga-uom
added si-ta data
c7c24dc
raw
history blame
2.88 kB
ta_101174_0 மாலி தாக்குதலின் போது பலியாகிய இலங்கை அமைதி காக்கும் படையணியைச் சேர்ந்த இரு இராணுவத்தினரது பூதவுடல் இலங்கைக்கு கொண்டு வந்து பின்னர் அவர்களது கிராமங்களான பொலனறுவை மற்றும் பொல்பிடிகமவிற்கு (5) ஆம் திகதி காலை எடுத்துச் செல்லப்பட்டது.
ta_101174_1 இவர்களது பூதவுடல்கள் தேசிய கொடிகள் போர்க்கப்பட்டு இராணுவ மோட்டார் சைக்கிள் அணி மரியாதையுடன் அவர்களது இல்லங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
ta_101174_2 பொலனறுவையை பிறப்பிடமாக கொண்ட 11 ஆவது இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த மேஜர் எச்.டப்ள்யூ.டீ ஜயவிக்ரம அவர்களது பூதவுடல் எடுத்து வரும் சமயத்தில் பாடசாலை மாணவர்கள், தாதிமார்கள், அரச ஊழியர்கள் மற்றும் அப்பிரதேசத்தைச் சேர்ந்த பொது மக்கள் வீதிகளிலிருந்து இவருக்கு தங்களது கௌரவ மரியாதைகளை செலுத்தினார்கள்.
ta_101174_3 அத்துடன் பொல்பிடிகமவை பிறப்பிடமாகவும் பொறிமுறை காலாட் படையணியைச் சேர்ந்த சாஜன் எஸ்.
ta_101174_4 எஸ் விஜயகுமார அவர்களுக்கு அப்பிரதேசத்தைச் சேர்ந்த பொது மக்களது கௌரவ மரியாதைகள் இவரது பூதவுடலுக்கு வழங்கப்பட்டது.
ta_101174_5 இவர்கள் இருவரதும் பூதவுடல் (7) ஆம் திகதி வியாழக் கிழமை பொலனறுவை மற்றும் பொல்பிடிகம பிரதேசத்திலுள்ள மயானங்களில் இராணுவ மரியாதைகளுடன் அடக்கம் செய்யப்படும்