cheranga-uom
added si-ta data
c7c24dc
raw
history blame
2.48 kB
ta_101415_0 இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு உத்தியோக பூர்வமான விஜயத்தை இம் மாதம் (29) ஆம் திகதி காலை மேற்கொண்டார்.
ta_101415_1 வன்னி தலைமையகத்திற்கு வருகை தந்த இராணுவ தளபதியை வன்னி பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்கள் வரவேற்றார்.
ta_101415_2 பின்னர் தளபதிக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
ta_101415_3 தலைமையகத்திற்கு வருகை தந்த இராணுவ தளபதியவர்கள் அவர்களது வருகையை நினைவு படுத்தும் முகமாக தலைமையக வளாகத்தினுள் மரநடுகையை மேற்கொண்டார்.
ta_101415_4 அதனை தொடர்ந்து தலைமையக வளாகத்தினுள் அமைந்துள்ள இராணுவ நினைவு தூபிக்கு சென்று நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களை நினைவு படுத்தி மலரஞ்சலியும் செலுத்தினார்.
ta_101415_5 பின்பு படைத் தளபதிகள், பாதுகாப்பு முன்னரங்க பராமரிப்பு தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் படையணிகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் படையினர் மத்தியில் இராணுவ கடமைகள் குறித்து உரையினை மேற்கொண்டார்.