cheranga-uom
added si-ta data
c7c24dc
raw
history blame
2.25 kB
ta_107962_0 வெலிஓயாவில் அமைந்துள்ள பரனகமவெவ பாடசாலைக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் ‘செனஹஷ அபி’ எனும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் ஜெயபஹலம் 'முனையம், இலங்கை துறைமுக அதிகாரசபையின் அனுசரனையில் 62 ஆவது படைப் பிரிவின் முழுமையான ஏற்பாட்டுடன் நன்கொடைகள் வழங்கி வைக்கப்பட்டன.
ta_107962_1 இந்த நன்கொடைகள் 62 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் தம்மிக ஜயசிங்க அவர்களது வழிக்காட்டலின் கீழ் 621 ஆவது படைத் தலைமையகத்தின் தலைமையில் (4) ஆம் திகதி வெள்ளிக் கிழமை இடம்பெற்றது.
ta_107962_2 பாடசாலை மாணவர்கள் 135 பேருக்கு பாடசாலை உபகரணங்களும், அத்துடன் பாடசாலைக்கு ஆய்வுகூட அலுமாரிகள், சங்கீத உபகரணங்கள், நூலக புத்தகங்கள் மற்றும் பாடசாலையில் பயண்படுத்தக்கூடிய பொருட்கள் இந்த நிகழ்வினூடாக நன்கொடையாக வழங்கப்பட்டது.
ta_107962_3 இந்த நிகழ்வில் 62 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் தம்மிக ஜயசிங்க, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், பாடசாலை நிர்வாகத்தினர் இணைந்திருந்தனர்.