|
ta_109022_0 இலங்கைக்கான கனடா உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் உயர் ஸ்தானிகர் மதிப்புக்குரிய டேவிட் மெக்கினன் அவர்கள் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களை உத்தியோகபூர்வமாக இம் மாதம் (4) ஆம் திகதி பலாலியிலுள்ள தலைமையகத்தில் சந்தித்தார். |
|
ta_109022_1 இந்த சந்திப்பின் போது, பாதுகாப்பு படை தளபதி வடக்கு மாகாணத்தில் இலங்கை இராணுவத்தின் தலைமையிலான தேசிய நிர்மாண மற்றும் மீள்குடியேற்ற திட்டங்கள் தொடர்பாகவும், யாழ்ப்பாண குடா நாட்டில் தற்போதைய பாதுகாப்பு நிலைமை தொடர்பான விடயங்களை விளக்கி கூறினார். |
|
ta_109022_2 இச்சந்தர்ப்பத்தில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளும் இணைந்திருந்தனர். |
|
|