cheranga-uom
added si-ta data
c7c24dc
raw
history blame
2.42 kB
ta_116974_0 இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலாயத்தின் பாதுகாப்பு இணைப்பதிகாரி கேர்ணல் சஜாட் அலி அவர்கள் இம் மாதம் (11) ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் சந்தித்தார்.
ta_116974_1 இராணுவத் தளபதி மற்றும் பாதுகாப்பு இணைப்பதிகாரிக்கு இடையில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு இரு நாடுகளுகளுக்குமிடையிலான உறவு முறைகள் மேம்படுத்தப்பட்டன.
ta_116974_2 2009 மே மாதத்திற்கு முன்னர் வன்னி மனிதாபிமான நடவடிக்கைகளின் முக்கியமான கட்டங்களில் பாகிஸ்தான் இராணுவம் எமக்கு வழங்கிய ஆதரவை நினைவு படுத்தி இராணுவ தளபதியவர்கள் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலாயத்தின் பாதுகாப்பு இணைப்பதிகாரிக்கு நன்றிகளை இச்சந்திப்பின்போது தெரிவித்தார். மேலும் கேர்ணல் சஜாட் அலி அவர்கள் இலங்கை இராணுவத்திற்கு தொடர்ந்தும் பாகிஸ்தான் இராணுவம் ஆதரவளிப்பதாக இராணுவ தளபதிக்கு தெரிவித்தார். இறுதியில் இவர்கள் இருவரது சந்திப்பை நினைவு படுத்தும் முகமாக இருவர்களுக்குமிடையில் நினைவு சின்னங்கள் பரிமாறப்பட்டன.