|
ta_12046_0 கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்துசித்த பனன்வல அவர்களின் ஒத்துழைப்புடன் வெலிகந்த பௌத்த மத்திய நிலையத்தின் கட்டிட நிர்மான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. |
|
ta_12046_1 1942 ஆம் ஆண்டு நிர்மானிக்கப்பட்ட பாஹொட விகாரை எல்டிடிஈ பயங்கரவாதிகளினால் கடந்த காலங்களில் அழிக்கப்பட்டிருந்தது. |
|
ta_12046_2 இந்த விகாரை பௌத்த மதகுருவான தெல்விட மெதலங்கார தேரர் அவர்களின் பூரண ஏற்பாட்டுடன் இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் நிர்மானிக்கப்பட்டு வருகின்றது. |
|
ta_12046_3 இந்த விகாரையில் பௌத்த ‘பிரித்’ தான நிகழ்வுகள் மஹா சங்க தேரர் அவர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றன. |
|
ta_12046_4 இந்த தான நிகழ்விற்கு அப்பிரதேச பொது மக்கள், பாதுகாப்பு படையினர் பொலிஸார் இணைந்திருந்தனர். |
|
ta_12046_5 மேலும் 23 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் சூல அபேநாயக, கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பதவி நிலை பிரதானி பிரிகேடியர் மைக்கல் வன்னியாரச்சி, கேர்ணல் வன்னியாரச்சி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர். |
|
|