|
ta_2426010_0 மால்டாவில் நடைபெற்ற 24 ஆவது பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டிலும் பாரிஸில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பிலான மாநாட்டிலும் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நாடு திரும்பினார். |
|
ta_2426010_1 24 ஆவது பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த 27 ஆம் திகதி மாநாட்டில் விசேட உரையொன்றை நிகழ்த்தினார். |
|
ta_2426010_2 அதன் பின்னர் பாரிஸில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பிலான மாநாட்டில் ஜனாதிபதி கலந்துகொண்டார். |
|
ta_2426010_3 இந்த மாநாட்டில் ஐக்கிய நாடுகள் சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 150 அரச தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர். |
|
ta_2426010_4 இதேவேளை, உலக காலநிலை மாற்றம் தொடர்பிலான மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று நடைபெற்றன. |
|
|