cheranga-uom
added si-ta data
c7c24dc
ta_2962577_0 இலங்கை மத்திய வங்கியின் அனுமதியின்றி காலி பகுதியில் நடத்திச் செல்லப்பட்ட இரண்டு வெளிநாட்டு நாணயமாற்று நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டு, ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ta_2962577_1 சந்தேகநபர்களை காலி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய பின்னர், எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
ta_2962577_2 இலங்கை மத்திய வங்கியின் அனுமதியின்றி காலி பிரதேசத்தில் வெளிநாட்டு நாணயங்கள் கொள்வனவு மற்றும் விற்பனை இடம்பெறுவதாக கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
ta_2962577_3 இதற்கமைய இரண்டு நிலையங்களை சுற்றிவளைத்த பொலிஸார், பல்வேறு நாடுகளின் நாணயங்களைக் கைப்பற்றியதுடன், நாணய மாற்று நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மற்றும் அதற்குத் துணைபுரிந்தவர்கள் என 7 பேரைக் கைது செய்தனர்.
ta_2962577_4 காலி பிரதேசத்தைச் சேர்ந்த ஏழு பேரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.
ta_2962577_5 இந்த வெளிநாட்டு நாணய மாற்று நிலையங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.