|
ta_4309226_0 பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஊத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (04) பிற்பகல் இலங்கையை வந்தடைந்தார். |
|
ta_4309226_1 நாட்டை வந்தடைந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பிரதமர் ரணில் விக்ரமரசிங்க வரவேற்றார். |
|
ta_4309226_2 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்புக்கு ஏற்ப நாட்டை வந்தடைந்த பாகிஸ்தான் பிரதமர் நாளை மறுதினம் வரை நாட்டில் தங்கியிருக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. |
|
ta_4309226_3 பாகிஸ்தான் பிரதமரை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை (05) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. |
|
ta_4309226_4 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர்கள் சிலரை சந்தித்து பாகிஸ்தான் பிரதமர் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். |
|
ta_4309226_5 சுகாதாரம்,விஞ்ஞானம் மற்றும்தொழில்நுட்பம்,வர்த்தகம்,புள்ளிவிபரவியல்,மாணிக்ககல் மற்றும் தங்காபரணங்கள்,நிதி மோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்குதல், கலாசாரம் ஆகிய விடயங்கள் தொடர்பில் இரு தரப்பு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளன. |
|
|