cheranga-uom
ta-en added
a13a3d2
ta_100441_0 மைத்திரி நிர்வாகத்தில் வடக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்படமாட்டாது என்று பொது வேட்பாளர் மைத்திபால சிறிசேன மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ta_100441_1 கொழும்பில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ta_100441_2 நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வடக்கின் இராணுவ முகாம்கள் அனைத்தும் நீக்கப்படும் என்று அவர்கள் பொய்யான பரப்புரையை அரசாங்க தரப்பினர் மேற்கொண்ட வருகின்றனர்.
ta_100441_3 தமிழ் தேசிய கூட்டமைப்பு எங்களுக்கு ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து, கூட்டமைப்புடன் இரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டதாக ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரும் சொல்லி வருகின்றார்கள்.
ta_100441_4 இவை முற்றாக பொய்.
ta_100441_5 அவ்வாறு எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளப்பட வில்லை.
ta_100441_6 என தெரிவித்தார்.