cheranga-uom
ta-en added
a13a3d2
ta_102496_0 தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்கள் தொடர்பான, அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் இலங்கையை வந்தடைந்துள்ளார்.
ta_102496_1 அவர் இன்று அதிகாலை கட்டுநாயக்க வானூர்தி தளத்தை வந்தடைந்ததாக எமது வானூர்தி நிலைய செய்தியாளர் தெரிவித்தார். நாளை வரை நாட்டில் தங்கியிருக்கும் உதவி ராஜாங்க செயலாளர்,  இரு தரப்பு உறவுகள், பிராந்திய விவகாரங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.. தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிரதி உதவி ராஜாங்க செயலாளர் அதுல் கெஷாப்பும் இந்த பயணத்தில் இணைந்து கொண்டுள்ளார்.
ta_102496_2 இதனிடையே, சிவில் சமூகத்தினர் மற்றும் மதத்தலைவர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளையும்  அமெரிக்க பிரதிநிதிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
ta_102496_3 தேசிய தேர்தல் ஒன்று நடைபெற்றதன் பின்னர் ராஜாங்க செயலாளர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்கின்றமை இதுவே முதல் தடவை  என கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.