cheranga-uom
ta-en added
a13a3d2
ta_102517_0 முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தாநந்த அலுத்கமகே மற்றும் ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனங்களுக்கு எதிராக ஜே.வி.பி முறைப்பாடு தெரிவித்துள்ளது.
ta_102517_1 லஞ்ச மற்றும் ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் இன்று ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்து நெத்தியால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ta_102517_2 கிரிக்கட் நிறுவனத்தில் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தே இந்த முறைப்பாட்டை முன்வைத்ததாக அவர் செய்தியாளர்களிடம் தெரிpவித்தார்.
ta_102517_3 இலங்கை கிரிக்கட் விளையாட்டுத்துறைக்கு மிகவும் முக்கிய பொறுப்பைக் கொண்டுள்ள ஸ்ரீலங்கா கிரிக்கட்டுக்கும், அதன் பிரதான செயலாளர் ஷாந்த ரணதுங்க, முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தாநந்த அலுத்கமகே, கிரிக்கட் நிறைவேற்றுக்குழு, இடைக்கால நிர்வாக என்பன இந்த முறைப்பாட்டில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.
ta_102517_4 குறிப்பாக கடந்த காலங்களில் சூரியவௌ கிரிக்கட் மைதானத்தை நிர்வகிப்பதற்காக அநாவசியமாக பாரிய நிதி விரயம் செய்யப்பட்டுள்ளது.
ta_102517_5 துறைமுக அதிகார சபையினதும், அரசாங்கத்தினதும் பணம் இதற்காக செலவிடப்பட்டுள்ளதாக சுனில் ஹந்துநெத்தி தெரிவித்தார்.