cheranga-uom
ta-en added
a13a3d2
ta_104608_0 புறக்கோட்டை - பெஸ்டியன் மாவத்தையிலுள்ள பேருந்து நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் அனைத்து தூரசேவை பேருந்துகளும் சேவை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
ta_104608_1 11 கோரிக்கைகளை முன்வைத்து நேற்று நள்ளிரவு முதல் இந்த சேவைப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ta_104608_2 தேசிய நெடுஞ்சாலை சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் இயக்கம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
ta_104608_3 இதுதவிர, தமக்கு வழங்கப்பட்டுள்ள சீருடையை அணிய முடியாது எனத் தெரிவித்தும் பல கோரிக்கைகளை முன்வைத்தும் ஹட்டனிலிருந்து கொழும்புக்கு செல்லும் தனியார் பேருந்து ஊழியர்கள் பணி நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ta_104608_4 ஹட்டனிலிருந்து கொழும்புக்கு பயணத்தை ஆரம்பிக்கும் அனைத்து தனியார் பேருந்து ஊழியர்களும் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ta_104608_5 தங்களுக்கு போதியளவிலான வசதிகள் இல்லையென தெரிவித்து பேருந்து சாரதிகளும் நடத்துனர்களும் பணி நிறுத்தத்தில் ஈடுப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை, பாணந்துறை பேருந்து தரிப்பிடத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் தனியார் பேருந்துகளும் இன்று சேவை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
ta_104608_6 பேருந்து தரிப்பிடத்தில் முறையான கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட ஏனைய பொது வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
ta_104608_7 தற்போது அந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.