|
ta_104635_0 அரசாங்கம் எதிர்கட்சி அரசியல்வாதிகள் மீது சேறு பூசி எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற முயல்வதாக முன்னாள் அமைச்சர் மகிந்த யாப்பா அபயவர்தன தெரிவித்துள்ளார். |
|
ta_104635_1 நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.துமிந்த சில்வாவின் பெயரை வெலே சுதாவின் சம்பவத்துடன் தொடர்பு படுத்துவது, இதன் திட்டத்தின் ஒரு பகுதி எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். |
|
ta_104635_2 இன்று மாத்தறையில் இடம்பெற்ற சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். |
|
ta_104635_3 வெலே சுதாவின் வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்ட ஏனைய பெயர்களை வெளியிடும் படி காவல்துறை பேச்சாளருக்கு நான் சவால் ஒன்றை விடுக்கிறேன். |
|
ta_104635_4 துமிந்த சில்வாவின் பெயர் மாத்திரமா அந்த வாக்கு மூலத்தில் அடங்கியுள்ளது. |
|
ta_104635_5 வெளியிடப்பட்ட ஏனையவர்களின் பெயர்களை அரசாங்கம் வெளியிடப்போவதில்லை. |
|
ta_104635_6 வெலே சுதாவின் வாக்கு மூலத்தின் மூலம் அரசாங்கம் சேறு பூசி தேர்தலில் வெற்றிப்பெற முயற்சிப்பதாகவும் முன்னாள் அமைச்சர் மகிந்த யாப்பா அபயவர்தன தெரிவித்துள்ளார். |
|
|