cheranga-uom
ta-en added
a13a3d2
ta_152107_0 மகவிலச்சிய மெதஓயா மடுவ குளத்தை புனரமைக்கும் பணிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
ta_152107_1 நீர்பாசன மற்றும் விவசாய அமைச்சின் வழிகாட்டலில் உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் மெதஓயா மடுவ குளத்தின் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ta_152107_2 இதற்கென 50 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
ta_152107_3 மெதஓயா மடுவ குளத்தின் அணைக்கட்டை புனரமைத்தல், வேலியமைத்தல், சேற்றை அப்புறப்படுத்தல் போன்ற நடவடிக்கைகள் இதன்கீழ் இடம்பெறுகின்றன.
ta_152107_4 இப்பகுதியில் உள்ள பெரும்பாலான விவசாய குடும்பங்கள் இதன்மூலம் நன்மையடையவுள்ளன.
ta_152107_5 அத்துடன் மெதஓயா மடுவ குளத்தின் புனரமைப்பு பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் அட்டமஸ்தானாதிபதி சங்கைக்குரிய பல்லேக ஸ்ரீநிவாச தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரும் அமைச்சர்களான, பி.ஹெரிசன், கயந்த கருணாதிலக்க, சந்திராணி பண்டார உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.