|
ta_153427_0 இறைமை , தன்னிறைவு மற்றும் வெளி சக்திகளின் அழுத்தங்களுக்கு துணிச்சலுடன் முகங்கொடுக்ககூடிய நாடொன்றை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் தம்மை அர்ப்பணிக்க வேண்டுமென எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள தேசிய தினச் செய்தியில் தெரிவித்துள்ளார். |
|
ta_153427_1 அனைவரும் ஒன்றிணைந்து இறைமை, தன்னிறைவு மற்றும் வெளிச்சக்திகளின் அழுத்தங்களை துணிச்சலுடன் எதிர்கொள்ளக்கூடிய நாடாக இலங்கையை மாற்றவேண்டுமென தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவர் இவற்றை அனைவருக்கும் பெற்றுக்கொடுக்க தான் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளப்போவதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
|
ta_153427_2 பிரிட்டிஸ் ஏகாதிபத்திடமிருந்து விடுதலை கிடைத்தமை சுதந்திர தினமென சொல்லப்பட்டாலும் கூட உண்மையிலேயே ஒரே கொடியின் கீழ் ஒரே நாடாக பல்லினத்தன்மையை ஆதாரமாக கொண்டு சுதந்திரம் பெற்ற துணிச்சல் மிக்க மனிதர்களே உண்மையான சுதந்திரத்தின் அடையாளம் எனவும் எதிர்க்கட்சி தலைவர் தனது செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார். |
|
|