cheranga-uom
ta-en added
a13a3d2
ta_489741_0 தெற்கு நெடுஞ்சாலையின் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையிலான பகுதி முதலாவது காலாண்டிற்குள் பூர்த்தி செய்யப்பட்டு எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் மக்களின் பாவனைக்கென திறந்து வைக்கப்படுமென அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ta_489741_1 துறைமுகங்கள் அமைச்சில் புதிய ஆண்டிற்கான பணிகளை ஆரம்பித்து வைத்தன் பின்னரே அமைச்சர் இவ்வாறு தெரிவிதித்தார்.
ta_489741_2 அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உரையாற்றுகையில் ; “தெற்கு நெடுஞ்சாலையின் நிர்மாண பணிகள் பூர்த்தி செய்யப்பட்டதையடுத்தே அது திறந்து வைக்கப்பட்டது.
ta_489741_3 எ னினும் அதில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுகின்றன.
ta_489741_4 எனினும் தெற்கு நெடுஞ்சாலையின் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையிலான நெடுஞ்சாலையின் நிர்மாண பணிகள் முதல் காலாண்டிற்குள் பூர்த்தி செய்து திறந்து வைக்க எதிர்பார்த்துள்ளோம்.
ta_489741_5 எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் இதனை திறந்து வைக்க திட்டமிட்டுள்ளோம்.”