ta_119528_0 ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள 12ஆவது படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் என் டீ வன்னியாராச்சி அவர்கள் தமக்கு கிடைக்கப்பெற்ற இராணுவத் தலைமையகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் பதவியின் நிமித்தம் கடந்த திங்கட் கிழமை(14) இப் படைத் தலைமையகத்திலிருந்து விடைபெற்றுச் சென்றார். ta_119528_1 இதன் போது 18ஆவது கெமுனு ஹேவா படையினரால் இராணுவ அணிவகுப்பு மரியாதை நிகழ்வுகளும் இடம் பெற்றதுடன் இப் படைத் தளபதியவர்களால் மரநடுகையும் இடம் பெற்றது. ta_119528_2 இந் நிகழ்வில் 121 மற்றும் 122ஆவது படைப் பிரிவுகளின் கட்டளை அதிகாரிகள் மற்றும் 12அவது படைத் தலைமையகத்தின் கீழ் சேவையாற்றும் படைப் பிரிவுகளின் தளபதிகள் மற்றும் படையினர் போன்றோர் கலந்து கொண்டனர்.