ta_102513_0 லஞ்ச மற்றும் மோசடி விசாரணை ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம், முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவின் வெளிநாட்டு பயணத்தை இன்று ரத்து செய்துள்ளது. ta_102513_1 அவருக்கு எதிரான 50 மோசடி குற்றச்சாட்டு குறித்து லஞ்ச ஆணைக்குழு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து, இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ta_102513_2 கடந்த 2006ஆம் ஆண்டு தேசிய லொத்தர் சபையின் தலைவராக சரண குணவர்தன செயல்பட்ட போது இந்த மோசடி இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ta_102513_3 இதனிடையே, முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவை எதிர்வரும் 11 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகும்படி கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டுள்ளார். ta_102513_4 Update : Monday, 02 February 2015 - 19:50 ----------------------------------------- சரண குணவர்த்தன கடவுச் சீட்டு ரத்து முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்த்தன கடவுச் சீட்டு ரத்துச் செய்யப்பட்டுள்ளது. ta_102513_5 லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் கோரிக்கையின் போரில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது. ta_102513_6 முறைக்கேடான முறையில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் அவருக்கு எதிராக லஞ்ச ஊழல்  ஆணைக்குழுவின் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ta_102513_7 2006ஆம் ஆண்டு தேசிய லொத்தர் சபையின் தலைவராக சரண குணவர்தன பணியாற்றிய காலப்பகுதியில் இவர் இவ்வாறு ஊழலில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.