ta_104594_0 தம்மை முதலமைச்சர் பதவிலிருந்து நீக்கியமை சட்ட விரோதமானது என தெரிவித்து ஊவா மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ தாக்கல் செய்த வழக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது. ta_104594_1 மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அவர் தமக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். ta_104594_2 இன்று வழக்கை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான விஜித் மலல்கொட மற்றும் எச்.பி.ஜே. ta_104594_3 மடவல ஆகியோர், ஷசிந்திர ராஜபக்ஷ சமர்ப்பித்த மனுவில் குறைப்பாடுகள் இருப்பதாக தெரிவித்து, அதனை நிராகரித்தனர். ta_104594_4 ஊவா மாகாண சபையின் புதிய முதலமைச்சர் ஹரின் பர்ணான்டோ அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டமை சட்டவிரோதமானது எனவும், அது பொதுமக்களின் விருப்பத்திற்கு புறம்பானது எனவும் அவர் தெரிவித்தார்.