ta_106720_0 உந்துருளிகளின் பயணிப்போர், முழுமையாக முகத்தை மறைக்கும் தலைகவசத்தை அணிவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை, இன்று முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். ta_106720_1 இந்த சட்டத்தை மீறுகின்றவர்களுக்கு எதிராக அபராத சீட்டு வழங்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ta_106720_2 இதேவேளை, முழுமையாக முகத்தை மறைக்கும் தலை கவச தடைக்கு எதிராக, மாத்தறையில் உள்ள மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் நேற்று முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்டிருந்தது. ta_106720_3 மாத்தறை இளைஞர் பௌத்த சங்கம் மற்றும் ஊடகவியலாளர்கள் சிலர் இந்த முறைப்பாட்டை முன்வைத்திருந்தனர். ta_106720_4 குறித்த தடையின் மூலம், தமது உயிருக்கு ஆபத்து நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. ta_106720_5 முகத்தை முழுமையாக மூடிய தலைகவச தடையானது தேசிய பிரச்சினையாக மாறியிருப்பதன் காரணமாக இதனை மனித உரிமை ஆணைக்குழு தலைமையகத்திற்கு அனுப்ப உள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.