ta_100724_0 ரணவிரு செவன மற்றும் அபிமன்சல 1 2 3 அத்துடன் மிஹிந்து செத் மெதுரவின் உள்ள அங்கவீனமுற்ற படைவீரர்களது திறமைகளை வெளிக் கொனரும் நோக்கில் அவர்களால் உருவாக்கப்பட்ட 447 கைவிணைப் பொருட்கள் போன்றன ஜேடீஏ ஆட் கலரியில் வெள்ளிக் கிழமை உட்டானவீரய எனும் தலைப்பில் (13) காட்சிப்படுத்தப்பட்டதோடு இக் கண்காட்சியானது வியாழக் கிழமை (12) மாலை இராணுவத் தளபதியவர்களால் திறந்து வைக்கப்பட்டது. ta_100724_1 அந்த வகையில் இவை தொடர்பான ஊடக சந்திப்பானது வியாழக் கிழமை (05) மீள் குடியேற்ற பணிப்பகத்தின் பணிப்பாளரான சிரான் அபேசேகர அவர்கள் அத்துடன் மீள் குடியேற்ற பணிப்பகத்தின் பிரதி பணிப்பாளரான பிரிகேடியர் உபுல் வீரகோண் அபிமல்சல 2 தளபதியான கேர்ணல் சிரான் வெலிகம மற்றும் மிஹிந்து செத் மெதுரவின் தளபதியான லெப்டினன்ட் கேர்ணல் விஜேந்திர குணதிலக போன்றோரின் தலைமையில் இவ் ஊடக சந்திப்பு இடம் பெற்றது. ta_100724_2 மேலும் 34 மர கைவிணைப் பொருட்கள் 172 சித்திரங்கள் 203 கைவிணைப் பொருட்கள் மற்றும் 23 ஏணைய ஆக்கப்பாட்டு பொருட்கள் போன்றன 100ற்கும் மேற்பட்ட படையினரால் இதன் போது ஆக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது. ta_100724_3 இவ் ஒருநாள் கண்காட்சியானது பொது மக்களின் காட்சிப்பாட்டிற்காக இலவசமாக காலை 0900 மணிமுதல் மாலை 0800 மணிவரை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ta_100724_4 மேலும் 2019 - ஆட் அன்ட் கிராப்ட் எனும் தலைப்பில் மீள்குயேற்ற பணிப்பகத்தின் தலைமயில் ஒழுங்கு செய்யப்பட்ட இந் நிகழ்வானது இராணுவத் தளபதியவர்களின் எண்ணக்கருவிற்கமைய நிறைவேற்று பணிப்பாளர் அவர்களின் வழிகாட்டலின் கீழ் அங்கவீனமுற்ற இராணுவப் படையினரின் திறமைகளை வெளிக் கொணரும் வகையில் அமைந்துள்ளது.