ta_101587_0 இலங்கை இராணுவம் தனது 69 ஆவது ஆண்டு தின நினைவு விழாவை ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி புதன் கிழமை இன்றைய தினம் கொண்டாடுகின்றது. ta_101587_1 இலங்கை இராணுவம் 1949 ஆம் ஆண்டு ‘சிலோன் இராணுவம்’ எனும் பெயரில் ஆரம்பிக்கப்பட்டு 1972 ஆம் ஆண்டு ‘ இலங்கை இராணுவமாக பெயர் மாற்றப்பட்டு இராணுவம் தற்பொழுது தனது 69 ஆண்டு தின பூர்த்திகளை எட்டியுள்ளது. ta_101587_2 இலங்கை இராணுவம் 2009 ஆம் ஆண்டு அப்பாவி பொது மக்களை மீட்டு இந்த நாட்டில் நிலையான சமாதானத்தை நிலைநாட்டி போர் வீரர்கள் எனும் பெயரை நிலைநாட்டியுள்ளனர்.நாட்டின் கொடிய பயங்கரவாதமான எல்டிடிஈ பயங்கரவாதத்தை தோற்கடித்து எமது இலங்கை இராணுவம் சர்வதேச ரீதியில் புகழை பெற்ற இராணுவமாக திகழ்கின்றது. ta_101587_3 இலங்கை இராணுவம் தற்பொழுது 24 படையணிகளை இராணுவத்தினுள் நிலை கொண்டுள்ளது. ta_101587_4 அத்துடன் எமது நாட்டின் அபிவிருத்தி மற்றும் புணரமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. ta_101587_5 இலங்கை இராணுவத்தின் 69 ஆவது ஆண்டு நிறைவு விழா (18) ஆம் திகதி வியாழக் கிழமை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது தலைமையில் இராணுவ அணிவகுப்பு மரியாதைகளுடன் இடம்பெறும். ta_101587_6 இலங்கை இராணுவம் தற்பொழுது நாட்டின் பாரிய அபிவிருத்தி நிமித்தம் தனது பங்களிப்பை அளித்துக் கொண்டு இருக்கின்றது. ta_101587_7 அதன் ஒரு கட்டமாக இராணுவ பொறியியலாளர் படையணி நாட்டின் பல்வேறு பகுதிகளில் வீடமைப்பு திட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றன. ta_101587_8 அத்துடன் 2000 கிராமிய குளங்கள் இராணுவத்தினரால் திருகோணமலை, பொலன்னறுவை மற்றும் வெல்லஸ்ஸ பிரதேசங்களில் புணரமைத்து வருகின்றனர். ta_101587_9 அத்துடன் நாட்டில் ஏற்படும் இயற்கை அனர்த்தங்கள், கட்டிட நிர்மான பணிகள் ,டெங்கு ஒழிப்பு பணிகள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டன. ta_101587_10 அத்துடன் இலங்கை இராணுவம் விளையாட்டு துறையில் சர்வதேச ரீதியில் பாரிய சாதனைகளை படைத்து தனது திறமைகளை வெ ளிக் காட்டியுள்ளது. ta_101587_11 எமது இராணுவம் கடந்த காலங்களில் ஏற்பட்ட சவால்களுக்கும் , பாரிய பிரச்சினைகளுக்கும் முகமளித்துள்ளன. ta_101587_12 அத்துடன் இலங்கை இராணுவத்தினால் பாதுகாப்பு கருத்தரங்கு, கூட்டுப்படை அப்பியாச பயிற்சிகள், மித்ர சக்தி அப்பியாசங்கள், பாதுகாப்பு கலந்துரையாடல், இராணுவ உரையாடல்கள் சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்பட்டன.