ta_109234_0 கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் உள்ள 57, 571 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் நட்பு ரீதியான கால்பந்து போட்டிகள் கிளிநொச்சி கனகபுரம் மைதானத்தில் ஓகஸ்ட் மாதம் 3 – 6 ஆம் திகதி வரை இடம்பெற்றது. ta_109234_1 இந்த போட்டிகள் முன்னாள் அரச அதிபர் எஸ் ராசநாயகம் இவர்களது நினைவு தினத்தை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. ta_109234_2 இந்த போட்டிகளில் 19 கால்பந்து அணியினர் பங்கேற்றுக் கொண்டனர். ta_109234_3 இறுதிச்சுற்றுப் போட்டிகள் வட்டக்கச்சி இளந்திரையல் மற்றும் உடயாதாரயி கால்பந்து அணியினருக்கு இடையில் இடம்பெற்றன. ta_109234_4 இப் போட்டிகளில் உடயதாராய் கால்பந்து அணியினர் வெற்றியை சுவீகரித்துக் கொண்டனர். ta_109234_5 இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக பிரதி பிரதேச செயலாளர் எஸ் சத்தியசீலன் அவர்கள் வருகை தந்தார். ta_109234_6 இந்த போட்டிகள் அனைத்தும் 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிபிரிய அவர்களது ஏற்பாட்டின் தலைமையில் இடம்பெற்றன.