ta_10971_0 முல்லைத்தீவு பாதுகாப்பு படையின் தளபதியின் வழிகாட்டலின் கீழ் 68 ஆவது படைப் பிரிவின் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட கால்பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டியானது கடந்த வெள்ளிக் கிழமை (01)ஆம் திகதியன்று புதுக்குடியிறுப்பு பொது மைதானத்தில் இடம்பெற்றது. ta_10971_1 மேலும் இப்போட்டியானது பெப்ரவரி 16-28 ஆம் திகதி வரை 32 கால்பந்தாட்ட கழகங்களின் பங்குபற்றுதலுடன் மாவட்டத்திலுள்ள நான்கு வெவ்வேறு மைதானத்தில் நடைபெற்றது. ta_10971_2 இப் போட்டியின் இறுதிச் சுற்றில் வட்டப்பள்ளி செந்ததமிழ் கால்பந்தாட்ட கழகமும் உடப்புங்குளம் அலை ஓசை கழகமும் கால்பந்தாட்ட போட்டியிட்டு உடப்புங்குளம் அலை ஓசை கால்பந்தாட்ட கழகமானது 2-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றியினை சுவீகரித்துக் கொண்டதோடு செய்ன்ட் ஜூட்ஸ் கால்பந்தாட்ட கழகமானது மூன்றாம் இடத்தை தனதாக்கிக் கொண்டது. ta_10971_3 இந்நிகழ்வில் மத தலைவர்கள், முல்லைத்தீவு படைத் தளபதி மேஜர் ஜெனரல் டுஷ்யந்த ராஜகுரு, 68 வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி ,681, 682, 683, வது படைகளின் படைத் தளபதிகள், சிரேஷ்ட அரச உத்தியோகத்தர்கள், தனியார் நிறுவன நிருவாகிகள், கடற் படை, ஆகாயப் படை, காவல் துறையினர் மற்றும் பெரும் திரளான மக்கள் இப் போட்டியினை கண்டுகளித்தனர். ta_10971_4 அதனைத் தொடர்ந்து பிரதம அதிதி மற்றும் ஏனைய மேன்மை தங்கிய அதிதிகளினால் வெற்றியாளர்களுக்கான வெற்றிக் கிண்ணங்கள் பணப் பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் போன்றன வழங்கி வைக்கப்பட்டன.