ta_111668_0 யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களின் தலைமையில் 51ஆவது படைத் தலைமையக சிவில் தொடர்பாடல் அதிகாரியவர்களின் ஒருங்கிணைப்பில் சுள்ளிபுர மத்தியின் தொல்புரம் எனும் பிரதேசத்தில் தேவைநாடிய வறிய குடும்பத்தினருக்கான புதிய வீடொன்று அமைத்து வழங்கப்பட்டுள்ளது. ta_111668_1 யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 51ஆவது படைப் பிரிவின் பொறியியலாளர் படையினரால் சிவில் இராணுவ ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் நோக்கிலான திட்டத்தின் மூலம் குறைந்த காலப் பகுதியில் 51ஆவது படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் ரொஷான் செனெவிரத்தின அவர்களின் கண்காணிப்பின் கீழ் 511ஆவது படைப் பிரிவின் 15ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் படையினரால் இத் திட்டத்திற்கான ஒத்துழைப்பு வழங்கப்பட்டுள்ளது. ta_111668_2 இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மேஜர் ஜெனரல் ஹெட்டியாராச்சி அவர்கள் கலந்து கொண்டதுடன் நிர்மானிக்கப்பட்ட புதிய வீடை கடந்த வியாழக் கிழமை(09) அவ் வறிய குடும்பத்தினரிடம் கையளித்தார். ta_111668_3 அதே வேளை படையினரால் சமையல் வாயு சிலின்டர் (பயள உலடiனெநச) ஒன்றும் வழங்கப்பட்டது. ta_111668_4 இதன் போது இக் குடும்பத்தாரது உற்றார் உறவினர்கள் போன்றோரும் கலந்து கொண்டனர். ta_111668_5 இந் நிகழ்வில் 511ஆவது படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் ரொஷான் செனெவிரத்ன அவர்களும் பல உயர் அதிகாரிகள் மற்றும் அயலவர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.