ta_117699_0 கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்துசித்த பனன்வல அவர்களது தலைமையில் (10) ஆம் திகதி இடம்பெறவிருக்கும் 69 ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு (6) ஆம் திகதி வியாழக் கிழமை இராணுவ ஆசிர்வாத பூஜைகள் மட்டக்களப்பில் உள்ள மங்களராம விகாரையில் இடம்பெற்றது. ta_117699_1 இந்த பௌத்த நிகழ்வுகள் 23 ஆவது படைத் தளபதி பிரிகேடியர் சூல அபேநாயக, 231 ஆவது கட்டளை தளபதி பிரிகேடியர் செனரத் நிவுன்ஹெல்ல மற்றும் கிழக்கு பாதுகாப்பு முன்னரங்க கட்டளை தளபதியின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. ta_117699_2 இந்த ஆசிர்வாத பூஜைகள் மஹா சங்க அம்பிடிய சுமனரத்ன தேரர் அவர்களது தலைமையில் மட்டக்களப்பு மங்களராமய விகாரையில் ‘செத் பிரித்’ பூஜைகளுடன் இடம்பெற்றன. ta_117699_3 இதன் போது நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களையும் நினைவு படுத்தி ஆசிர்வாத பூஜைகள் இடம்பெற்றன. ta_117699_4 ஆசிர்வாத பூஜைகளில் கிழக்கு முன்னரங்க பாதுகாப்பு கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மனோஜ் முதன்னாயக, படைத் தளபதிகள், இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர்.