ta_118442_0 மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே அவர்களது அறிவுறுத்தலுக்கமைய 14 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற யோகா தின நிகழ்வுகள் கொழும்பில் 7 இல் அமைந்துள்ள சுதந்திர சதுர்க்கத்தில் (1) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றன. ta_118442_1 இந்த நிகழ்வில் 14 ஆவது படைப் பிரிவைச் சேர்ந்த 100 படையினர்களும் 4 அதிகாரிகளும் ‘சுதசுன யோகா யதனாய் ‘ யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ta_118442_2 இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த படைக் கலச் சிறப்பணி, மின்சார பொறியியலாளர் படையணி மற்றும் இராணுவ மகளீர் படையணியைச் சேர்ந்த வீராங்கனைகள் இந்த நிகழ்வில் பங்கேற்றுக் கொண்டனர்.