ta_1320932_0 சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயத்தை பேங்கொக் கொண்டு செல்ல முயற்சித்த இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ta_1320932_1 பிலியந்தல பகுதியை சேர்ந்த 42 வயதான பெண்னொருவரும், ஜா-எல பகுதியை சேர்ந்த 27 வயதான ஆணொருவருமே இன்று (01) அதிகாலை 1.40 அளவில் கைது செய்யப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். ta_1320932_2 1,2669490 ரூபா பணத்தை சந்தேகநபர்கள் கடத்த முயற்சித்துள்ளனர். ta_1320932_3 சந்தேகநபரகளின் பயணப் பொதியிலிருந்து குறித்த வெளிநாட்டு நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளன. ta_1320932_4 சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்கப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.