ta_1528120_0 பொலன்னறுவை தமன்கடுவ பிரதேச சபைத் தலைவர் பிரேமசிறி முனசிங்க, ஹிங்குரங்கொட பிரதேச சபைத் தலைவர் சுசந்த ஞானரத்ன உட்பட ஆளுங்கட்சியின் 17 உறுப்பினர்கள் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளனர். ta_1528120_1 பொலன்னறுவையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அவர்கள் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளனர். ta_1528120_2 திம்புலாகல பிரதேச சபையின் உப தலைவர் ஆர். ta_1528120_3 புஷ்பகுமார, லங்காபுர பிரதேச சபையின் உப தலைவர் பந்துல சமன் ஆகியோரும் இவர்களில் அடங்குகின்றனர். ta_1528120_4 ஏனைய 13 பேரும் ஹிங்குரங்கொட, லங்காபுர, தமன்கடுவ, வெலிகந்த, திம்புலாகல ஆகிய பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.