ta_1902384_0 ஐந்து வர்த்தக நாமங்களின் கீழ் உற்பத்தி செய்யப்படுகின்ற 50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து பொதியின் விலையை 60 ரூபாவால் அதிகரிப்பதற்கு நுகர்வோர் விவகார அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது. ta_1902384_1 சீமெந்து உற்பத்தி நிறுவனங்களின் கோரிக்கைகளுக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ta_1902384_2 வரி அதிகரிப்புத் திருத்தம், துறைமுக ஏற்றுமதிக் கட்டணம் மற்றும் பங்கு பரிவர்தனையின் மாற்றம் என்பவற்றை ஆராய்ந்து விலை அதிகரிப்பிற்கு அனுமதி வழங்கியதாக நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டது. ta_1902384_3 அதற்கமைய, 870 ரூபாவாகக் காணப்பட்ட 50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து மூடையின் விலை 930 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ta_1902384_4 இந்த விலை அதிகரிப்பு நேற்று (01) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அதிகார சபை தெரிவித்துள்ளது. ta_1902384_5 அதாவது, உற்பத்தித் திகதி ஜூன் மாதம் முதலாம் திகதி என அச்சிடப்பட்டுள்ள சீமெந்து மூட்டையின் விலை மாத்திரமே 930 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ta_1902384_6 ஜூன் முதலாம் திகதிக்கு முன்னர் பொதியிடப்பட்டுள்ள சீமெந்து மூடைகளை புதிய விலையின் கீழ் விற்பனை செய்கின்றவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.