ta_3479504_0 மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் சந்தேகநபர் ஒருவர் பாய்ந்த சம்பவம் தொடர்பில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் . ta_3479504_1 குறித்த இருவரும் உடன் அமுல்படுத்தும் வகையில் நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவிக்கின்றார் . ta_3479504_2 கஞ்சா போதை பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் , குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்கு முற்பட்ட போது , நேற்று பிற்பகல் அவர் நீர்த்தேக்கத்தில் குதித்துள்ளார் . ta_3479504_3 நீரில் மூழ்கி காணாமற்போன குறித்த சந்தேகநபரை இதுவரையில் கண்டுபிடிக்கவில்லை எனவும் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார் . ta_3479504_4 இதேவேளை , சம்பவம் தொடர்பில் பிரதேச மக்கள் தலவாக்கலை பொலிஸ் நிலையத்திற்கு முன்னர் நேற்று மாலை ஆர்ப்பாடட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் . ta_3479504_5 சந்தேகநபரை பின்தொடர்ந்த பொலிஸ் உத்தியோத்தர் இருவரையும் கைது செய்யுமாறு வலியுறுத்தியே ஆர்ப்பட்டம் முன்னெடுக்கப்பட்டது . ta_3479504_6 சம்பவம் தொடர்பில் சிரேஷ்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன .