ta_3536395_0 மெக்ஸிகோ தலைநகரிலுள்ள டுராங்கோ (Durango) மாநிலத்தில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், கிட்டத்தட்ட 85 பேர் காயமடைந்துள்ளனர். ta_3536395_1 இவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதெனக் கூறப்படுகின்றது. ta_3536395_2 101 பேர் பயணித்த இந்த விமானம் விபத்துக்குள்ளானதில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என ஆளுநர் ஜோஸ் ஐஸ்பரோ (José Aispuro) தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். ta_3536395_3 மெக்ஸிகோவின் கௌடலுபே விக்டோரியா சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட AM 2431 ரக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. ta_3536395_4 முன்னைய தகவல்களின் படி, சீரற்ற காலநிலையே விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக Grupo Aeroportuario Centro Norte விமான நிலைய இயக்குநரகம் தெரிவித்துள்ளது. ta_3536395_5 விமானம் விபத்துக்குள்ளானதன் பின்னர் அதில் தீ ஏற்பட்டதாகவும் ஆனால், எவருக்கும் எரிகாயங்கள் ஏற்படவில்லை எனவும் சிவில் பாதிகாப்பு பேச்சாளர் அலெஜான்ட்ரோ கார்டோஸா (Alejandro Cardoza) தெரிவித்துள்ளார்.