ta_4439030_0 COLOMBO (News 1st) கண்டியில் அண்மையில் இடம்பெற்ற வன்முறை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் 27 பேரும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ta_4439030_1 சந்தேகநபர்கள் இன்று தெல்தெனிய நீதவான் நீதவான் எம்.எச்.பர்டிடீன் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியல் நீடித்து உத்தரவிடப்பட்டுள்ளது. ta_4439030_2 சந்தேகநபர்களில், குண்டசாலை பிரதேச சபைக்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டு வெற்றியீட்டிய சமந்த பெரேராவை, எதிர்வரும் 09 ஆம் திகதி இடம்பெறும் சபை அமர்வுக்காக சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்புடன் அனுப்ப நீதவான் இதன்போது உத்தரவிட்டார்.