ta_504128_0 Colombo (News 1st) முச்சக்கரவண்டிகளுக்கான கட்டணம் நாளை (02) நள்ளிரவு முதல் 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. ta_504128_1 அதற்கமைய, முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணம் 50 ரூபாவாக அறவிடப்படும் என இலங்கை சுயதொழில் தொழிற்சங்கத்தினரின் தேசிய முச்சக்கரவண்டிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. ta_504128_2 எரிபொருள் விலை குறைக்கப்பட்டதற்கமைய அதன் பயனை பயணிகளுக்கு பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சம்மேளனத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார். ta_504128_3 இதேவேளை, நாளை நள்ளிரவு முதல் முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைக்காத சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.