ta_5111645_0 Colombo (News 1st) புறக்கோட்டை , மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் சிறிய கொள்கலன் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட சிகரட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ta_5111645_1 இதன்போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 4 இலட்சம் சிகரட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ta_5111645_2 இவை சுமார் 20 மில்லியன் ரூபா பெறுமதி வாய்ந்தவை என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். கப்பல்களுக்கான பாகங்களை துபாயிலிருந்து கொண்டு வரும் போர்வையில், சிகரட் அடங்கிய கொள்கலன் இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. ta_5111645_3 சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பிரதான சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.