ta_100464_0 மக்கள் பிரதிநிதிகளுக்கு சுதந்திரமாக சேவையாற்றுவதற்கான சூழல் எதிர்வரும் தேர்தலின் பின்னர் உருவாக்கப்படும் என பொது வேட்பாளருக்கு இன்று ஆதரவு வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அச்சல ஜாகொட தெரிவித்துள்ளார். ta_100464_1 ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். ta_100464_2 இன்று அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்திருப்பது, நாட்டை முன்கொண்டு செல்வதற்காகும். ta_100464_3 இதில் ரகசிய உடன்படிக்கைகள் இல்லை. ta_100464_4 நாட்டை காட்டிக்கொடுப்பவர்கள் இல்லை. ta_100464_5 மைத்திரிபால சிரிசேன ஜனாதிபதியானதும், அவரின் அதிகாரங்கள் அகற்றப்படும். ta_100464_6 அதன் பின்னர், யாப்பு திருத்தப்படும். ta_100464_7 அதேநேரம், ரணில் விக்கிரமசிங்க இந்த காலப்பகுதியினுள் பிரதம மந்திரியாக நியமிக்கப்படுவார் எனவும் அச்சல ஜாகொட குறிப்பிட்டார். ta_100464_8 Update: Friday, 02 January 2015 - 08:05 PM ------------------------------------------------- அச்சல ஜாகொடவும் புத்திர சிகாமணியும் எதிரணியில் இணைந்தனர். ta_100464_9 ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அச்சல ஜாகொட எதிரணி பொது வேட்பாளருடன் இணைந்து கொண்டார். ta_100464_10 இதன்படி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அவர் ஆதரவளிக்கவிருப்பதாக அறிவித்துள்ளார். ta_100464_11 ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையமான சிறிகொத்தவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். ta_100464_12 ஜே வி பியின் நாடாளுமன்ற உறுப்பினராக 2004ம் அண்டு முதன் முதலில் நாடாளுமன்றத்துக்கு தெரிவான அவர், பின்னர் அமைச்சர் விமல் வீரவன்சவுடன் தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினராக செயற்பட்டு வந்தார். ta_100464_13 2010ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அச்சல ஜாகொட தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவானார். ta_100464_14 சிறிதுகாலம் அவர் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சராகவும் இருந்தார். ta_100464_15 அதன் பின்னர் தேசிய சுதந்திர முன்னணியில் இருந்து விலகி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் உறுப்பினராக செயற்பட்டு வந்தார். ta_100464_16 இதேவேளை முன்னாள் பிரதி அமைச்சரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான வீ.புத்திரசிகாமணியும் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதாக இன்று அறிவித்துள்ளார். ta_100464_17 அத்துடன் ஹிரியால மற்றும் குருனாகலை பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் 3 பேரும் பொது வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தனர்.