ta_100472_0 பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்துக்கு அமைய நாட்டின் இலவச கல்விக்கு பாதிப்பு ஏற்படாலம் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ta_100472_1 கண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். ta_100472_2 எதிரணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் விவசாயிகள் மகன் என சொல்லக்கூடியவருக்கு உரமானியம் தொடர்பில் மறதி ஏற்பட்டுள்ளது. ta_100472_3 அத்துடன் இலவச கல்வியை பெற்றுக் கொண்ட அவர்கள், பல்கலைக்கழக கல்வியின் போது கட்டண அறவீடுகளை செய்வதாக கூறுகின்றார்கள். ta_100472_4 எனவே பல்கலைக்கழகம் செல்ல எண்ணிக் கொண்டிருப்போருக்கு எதிரணியின் கொள்கை பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது. ta_100472_5 நிறைவேற்று அதிகாரத்தை ஏனைய பயன்படுத்தியதை போன்று தாம் பயன்படுத்தவில்லை. ta_100472_6 நாட்டின் நலனுக்காகவே அது பயன்படுத்தப்பட்டது. ta_100472_7 எனவேதான் தம்மை நல்ல மனது கொண்ட தலைவர் என எதிரணியில் உள்ளவர் தமது முதலாவது நேர்காணலில் குறிப்பிட்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.